இன்னாள் என்னாளும் பொண்ணாளாக இங்கு வருகை தந்த தங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்


வியாழன், 18 அக்டோபர், 2012

சில அரிய புகைப்படங்கள்

 
முதல் கணனி 



பீட்டில் இசைக்குழு 


ப்ரூஸ் லீ + செக் நொரிஸ் 



கொக்க கோலா 



டிஸ்னி வேர்ல்ட் 



முதல் புகைப்படம் பிரான்ஸ் 



உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட செய்தி முதன் முதலில் தெரிவிக்கப்படும் போது 



கூகிள் 1999



ஹிட்லர் 



கென்னடி சுடப்பட்ட போது 



மெக் டொனல்ட் 


பின் லேடன் குடும்பம் 



ஐன்ஸ்டீன் பரீட்சை பெறுபேறுகள் 


திங்கள், 16 ஜனவரி, 2012

பார் கோட் லேபிள் - எப்படி வாசித்து தெரிந்து கொள்வது?


பொதுவாக வெளி நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் காணப்படும் பொருட்கள் பெரும்பாலும் சீனத் தயரிப்புகளாகவே உள்ளன. சில பொருட்களில் எந்த நாட்டு பொருள் என்று குறிப்பிடப் பட்டிருக்காது விநியோஹிக்கும் இடம் தவிர.

இதோ கீழே உள்ள இலக்கங்களை வைத்து எந்த நாட்டு உற்பத்தி என்று தெரிந்து கொள்ளலாம்.

பார் கோட் லேபிளில் உள்ள முதல் 3 இலக்கங்களும் 690 அல்லது 691 அல்லது 692 ஆக இருப்பின் அது சீனத் தயாரிப்பு MADE IN CHINA

00 - 09 - USA & CANADA
30 - 37 - FRANCE
40 - 44 - GERMAN
471 - TAIWAN
49 - JAPAN
50 - UK

நன்றி
(மூலம் மின்னஞ்சல்)

செவ்வாய், 6 ஜூலை, 2010

FIFA 2010 யார் வெல்வார்கள்??




உலக கோப்பை கால் பந்தாட்ட போட்டியின் இறுதி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் இன் நேரத்தில் யார் வெல்லுவார்கள் என்று எப்டியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிராய்கன்னு பாருங்க.


1) பிரேசில் உலக கோப்பையை வென்றது 1994 ல், இதே போல 1970 லும் வெற்றி பெற்றார்கள் ஆகவே இந்த இரண்டு ஆண்டுகளையும் கூட்டினாள் 1994 + 1970 = 3964

2) இதே போல ஆஜெண்டினா 1986 + 1978 = 3964

3) ஜெர்மனி 1990 + 1974 = 3964

4) பிரேசில் 2002 + 1962 = 3964

5) இப்போ இந்த வருடம் (2010) கோப்பையை யார் வெல்வார்கள்?
சிம்பிள் 3964 - 2010 = 1954

1954 ல் உலக கோப்பையை வென்றது ஜேர்மனி.




Just WAIT & SEE ON 11.07.2010.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

மனதை உருக்கும் துயரங்கள் - கட்டாரிலிருந்து




எம்மவர் மத்திய கிழக்கு நாடுகளில் படும் அவதி பற்றி ஏராளமாக நமது வலைப்பதிவு அன்பர்கள் எழுதிக் கொண்டுதானிருகின்ரார்கள் இது மிகவும் பாராட்டதக்க விடயம். ஏன் இவை பற்றி இன்று தமிழ் பதிவுலகில் மலிந்து கிடக்கின்றதென்றால், இந்த அநியாயங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அதிகரித்துக்கொண்டுருகின்ற படியால்தானே.....
அந்த வகையில் நானும் இங்கு (கட்டார்) நம்மவர் படும் அவஸ்தைகளை சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

இங்கு பொதுவாக வாகனங்கள் அதிகரித்துக்கொண்டெ இருக்கின்றன. அதே போல இங்கு வாகன வீதிச் சட்டங்களும் அதிகம். இந்த சட்டங்களை மீறுவோருக்கு மிக உயர்ந்த அபராதங்கள் விதிக்கப்படும். அதாவது 500 - 10,000 கட்டாரி ரியால் வரை. சில இடங்களில் 50,000 ரியால் வரை. இது ஒரு வகையில் வரவேற்கபட வேண்டிய விடயம். ஏனெனில் இந்த நாட்டவர்கள் (அதாவது கட்டாரி) தமது வாகனங்களை தாறு மாறாக செலுத்துவார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்காக இத்தொகை இன்னும் அதிகரிக்கபட வேண்டும். இவ் அபராதத்தொகை இன் நாட்டவரின் ஒரு நாள் ஷொப்பிங் செலவு (சில பேருக்கு 1/2 நாள் செலவு)

இதிலே துயரம் என்னெவெனில் எந்த நாட்டவருக்கும் இச்சட்டம் பொதுவனது என்று வரும் போது. இங்கு நமது சகோதரர்கள் மாதம் 800 - 1000 ரியால் வரையான சம்பளத்துக்கே சாரதியாக வேலைக்கு வருகின்ரார்கள் அதுவும் தனது தாயை, மனைவியை, பிள்ளைகளை இன்னும் தமது நாட்டை உறவினர்களை விட்டு இங்கு வந்து மாடாய் கஷ்டப்பட்டு உழைக்கின்ரார்கள். ஆகவே இவர்கள் வாகனம் செலுத்தும் போது சில வேளைகளிள் தமது இன பந்துக்களை நினைத்துக் கொண்டு செலுத்தும் பொழுது தம்மை அறியாமலேயே இச் சட்டங்களை மீறி விடுகிறார்கள்.

நேபாளத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் இச் சட்டத்தை மீறியதால் அபராரத் தொகையாக 25,000 ரியால் விதிக்கபட்டது. இலங்கையை சேர்ந்த ஒரு சகோதரருக்கு 50,000 ரியால் விதிக்கபட்டது இவர்களின் மாதச்சம்பலமே 1000 ரியால் இவர்கள் வேலை செய்த நிறுவனத்தால் இவர்களுக்கு என்ன கூறப்பட்டது தெரியுமா இத்தொகையை செலுத்தி விட்டுத்தான் ஊர் போய் சேர முடியும் என்று சொல்லி விட்டார்கள். எத்தனை மாதங்கள் சம்பளம் உணவு இல்லாமல் வேலை செய்வார்கள், இவர்கள் யாருக்காக இங்கு உழைக்க வந்தார்களோ அவர்களுக்கு மாதா மாதம் எதை அனுப்புவர்கள், நாட்டை விட்டு தப்பி ஓடவும் முடியாது இக்கட்டான சூழ் நிலை நம்முடைய மனதை உறைய வைக்கும் ஒரு தப்பான முடிவிற்கு துணிந்தார்கள் ஆம் தாங்கலாகவே தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.



கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 10 பேர் வெவ்வேரு காரணங்களுக்காக இவ்வாரு தற்கொலை செய்து கொண்டார்கள். இவர்கலை நம்பி இருக்கும் பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவி ஆகியோரின் கதி, நினைத்துப்பார்தால் நம்முடைய கண்கள் கலங்குகின்ரன.

இப்படி எத்தனயோ சம்பவங்கள் என்னால் முடிந்ததை மேலும் வரும் பதிவுகளிள் எழுதுகிறேன்.



இதற்கு தீர்வுதான் என்ன?