இன்னாள் என்னாளும் பொண்ணாளாக இங்கு வருகை தந்த தங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்


செவ்வாய், 6 ஜூலை, 2010

FIFA 2010 யார் வெல்வார்கள்??




உலக கோப்பை கால் பந்தாட்ட போட்டியின் இறுதி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் இன் நேரத்தில் யார் வெல்லுவார்கள் என்று எப்டியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிராய்கன்னு பாருங்க.


1) பிரேசில் உலக கோப்பையை வென்றது 1994 ல், இதே போல 1970 லும் வெற்றி பெற்றார்கள் ஆகவே இந்த இரண்டு ஆண்டுகளையும் கூட்டினாள் 1994 + 1970 = 3964

2) இதே போல ஆஜெண்டினா 1986 + 1978 = 3964

3) ஜெர்மனி 1990 + 1974 = 3964

4) பிரேசில் 2002 + 1962 = 3964

5) இப்போ இந்த வருடம் (2010) கோப்பையை யார் வெல்வார்கள்?
சிம்பிள் 3964 - 2010 = 1954

1954 ல் உலக கோப்பையை வென்றது ஜேர்மனி.




Just WAIT & SEE ON 11.07.2010.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

மனதை உருக்கும் துயரங்கள் - கட்டாரிலிருந்து




எம்மவர் மத்திய கிழக்கு நாடுகளில் படும் அவதி பற்றி ஏராளமாக நமது வலைப்பதிவு அன்பர்கள் எழுதிக் கொண்டுதானிருகின்ரார்கள் இது மிகவும் பாராட்டதக்க விடயம். ஏன் இவை பற்றி இன்று தமிழ் பதிவுலகில் மலிந்து கிடக்கின்றதென்றால், இந்த அநியாயங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அதிகரித்துக்கொண்டுருகின்ற படியால்தானே.....
அந்த வகையில் நானும் இங்கு (கட்டார்) நம்மவர் படும் அவஸ்தைகளை சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

இங்கு பொதுவாக வாகனங்கள் அதிகரித்துக்கொண்டெ இருக்கின்றன. அதே போல இங்கு வாகன வீதிச் சட்டங்களும் அதிகம். இந்த சட்டங்களை மீறுவோருக்கு மிக உயர்ந்த அபராதங்கள் விதிக்கப்படும். அதாவது 500 - 10,000 கட்டாரி ரியால் வரை. சில இடங்களில் 50,000 ரியால் வரை. இது ஒரு வகையில் வரவேற்கபட வேண்டிய விடயம். ஏனெனில் இந்த நாட்டவர்கள் (அதாவது கட்டாரி) தமது வாகனங்களை தாறு மாறாக செலுத்துவார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்காக இத்தொகை இன்னும் அதிகரிக்கபட வேண்டும். இவ் அபராதத்தொகை இன் நாட்டவரின் ஒரு நாள் ஷொப்பிங் செலவு (சில பேருக்கு 1/2 நாள் செலவு)

இதிலே துயரம் என்னெவெனில் எந்த நாட்டவருக்கும் இச்சட்டம் பொதுவனது என்று வரும் போது. இங்கு நமது சகோதரர்கள் மாதம் 800 - 1000 ரியால் வரையான சம்பளத்துக்கே சாரதியாக வேலைக்கு வருகின்ரார்கள் அதுவும் தனது தாயை, மனைவியை, பிள்ளைகளை இன்னும் தமது நாட்டை உறவினர்களை விட்டு இங்கு வந்து மாடாய் கஷ்டப்பட்டு உழைக்கின்ரார்கள். ஆகவே இவர்கள் வாகனம் செலுத்தும் போது சில வேளைகளிள் தமது இன பந்துக்களை நினைத்துக் கொண்டு செலுத்தும் பொழுது தம்மை அறியாமலேயே இச் சட்டங்களை மீறி விடுகிறார்கள்.

நேபாளத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் இச் சட்டத்தை மீறியதால் அபராரத் தொகையாக 25,000 ரியால் விதிக்கபட்டது. இலங்கையை சேர்ந்த ஒரு சகோதரருக்கு 50,000 ரியால் விதிக்கபட்டது இவர்களின் மாதச்சம்பலமே 1000 ரியால் இவர்கள் வேலை செய்த நிறுவனத்தால் இவர்களுக்கு என்ன கூறப்பட்டது தெரியுமா இத்தொகையை செலுத்தி விட்டுத்தான் ஊர் போய் சேர முடியும் என்று சொல்லி விட்டார்கள். எத்தனை மாதங்கள் சம்பளம் உணவு இல்லாமல் வேலை செய்வார்கள், இவர்கள் யாருக்காக இங்கு உழைக்க வந்தார்களோ அவர்களுக்கு மாதா மாதம் எதை அனுப்புவர்கள், நாட்டை விட்டு தப்பி ஓடவும் முடியாது இக்கட்டான சூழ் நிலை நம்முடைய மனதை உறைய வைக்கும் ஒரு தப்பான முடிவிற்கு துணிந்தார்கள் ஆம் தாங்கலாகவே தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.



கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 10 பேர் வெவ்வேரு காரணங்களுக்காக இவ்வாரு தற்கொலை செய்து கொண்டார்கள். இவர்கலை நம்பி இருக்கும் பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவி ஆகியோரின் கதி, நினைத்துப்பார்தால் நம்முடைய கண்கள் கலங்குகின்ரன.

இப்படி எத்தனயோ சம்பவங்கள் என்னால் முடிந்ததை மேலும் வரும் பதிவுகளிள் எழுதுகிறேன்.



இதற்கு தீர்வுதான் என்ன?

வெள்ளி, 7 மே, 2010

சிகரட்டே இது ஒனக்கே நல்லா இருக்கா?



இது என்னோட முதல் பதிவு, பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும், பிடித்திருந்தால்........ ஹி ஹி ஒங்கலுக்கே தெரியும் என்ன செய்யனும்ம்னு.....

ஒரு நாளைக்கு ரெண்டு சிகரட் குடிச்சா ஒடம்புக்கு நல்லம்னு நம்ம டாக்டர் சொல்லி இருக்காருன்னு என் நண்பன் கிட்டே சொன்னென், ஒரு சிகரடே எடுத்து வாயுலே வச்சிகிட்டே யாருடா அந்த டாக்டர் னு என் நண்பன் எங்கிட்டே கேட்டான். அதுக்கு நான் "Benson & Hedges" அப்டீன்னென், என் ஃப்ரண்டு வாயுலே இருந்தே சிகரட் கீழே விழுந்துருச்சி.............



புகை பிடிப்பதட்கான காரணங்கள் ஏராளமானவை. ஒவ்வொருவரும் ஏராளமான காரணங்கள் வைத்திருப்பார்கள், சில பேர் காரணமே இல்லாமல் ஊதித் தள்ளுவார்கள், கேட்டா "சும்மா" என்பார்கள் (நானும் ஒரு காரணம் வைத்திருக்கின்றேன்.... ஹ்ம்ம் சொல்லெவே மாட்டேன்..)

சரி விஷயதுக்கு வருவோம்

இந்த புள்ளி விபரங்களை பாருங்கள், எல்லாமே அதிர்ச்சியானவை.........

1) உலக அளவிலே ஒவ்வொரு நாளும் 80,000 - 100,000 வரையிலன சிறு பிள்ளைகள் புகை பிடிக்க ஆரம்பிக்கிறாங்க. அதுவும் இதில் சரி அரைவாசி ஆசியாக் கண்டத்திலேதான்.


2) 13 வயது தொடக்கம் 15 வயதிட்கிடைபட்ட பிள்ளைகளிள் 5இல் ஒருவர் உலக அளவில் புகை பிடிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

3) புகை பிடிப்பதன் மூலம் பத்தில் ஒருவருக்கு (10:1) இறப்பு ஏற்படுகிறது, இது இப்படியே தொடரும் என்றால் 2030 ம் ஆண்டளவில் ஆறுக்கு ஒன்று (6:1) என்ற விகிதாசாரத்தில் இருக்கும்

4) ஒவ்வோரு 8 வினடிக்கும் புகைத்தல் மூலம் யராவது ஒருவருக்கு இறப்பு ஏற்படுகிறது



5)ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரட்டுக்கள் விற்றுத் தீர்க்கின்றன தெரியுமா? சுமார் 15 பில்லியன், அல்லது ஒரு நிமிடத்திற்கு 10 மில்லியன்.

6)பிரித்தானியாவில், 2வது உலக மஹா யுத்தத்தில் இறந்ததை விட 12 மடங்கு அதிகமானோர் இந்த புகை பிடிப்பால் இறந்து போகிறார்கள்.

7) உலக அளவில் கிழக்காசியாவிலேயே அதிகம் பேர் புகை பிடிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

யப்பா இப்பவே கண்ண கட்டுதே

மேலே உள்ள புள்ளி விபரங்கள் உலக சுகாதார மையத்தினால் 2002 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையாகும்... (அப்படியென்றால் 2010 எப்படி இருக்கும்)

சரி இந்த புகைத்தல நிப்பாட்ட நான் ஒரு Idea தாறேன் Try பண்ணி பாருங்க. யேன்னா நான் இந்த Idea வெ use பண்ணி 1 மாசம் நிறுத்தி இருந்தேன். (அப்புறம் ஸ்டர்ட் பண்ணினது வேற கதை)



முதல்ல என்ன பண்னுன் தெரியுமா? 1 பக்கட் சிகரட்டே வாங்கி வச்சிகோங்கே, இந்த பக்கட் ஒங்க கூடவே இருக்கனும் நீங்க போர வார இடத்திட்கெல்லாம் கூடவே கொண்டு போங்க.

ஸ்மோக் பண்ண தோணும் போதெல்லாம் ஒங்க மனசுல நீங்க " லேட்டாகி பன்னுவொம, நம்மே கைய்லதன் சிகடரட்டே இருக்கே அப்புரம் என்னே கொன்சம் லேட் அகி பத்தலாம்" அப்டீன்னு நெனச்சுகோங்க அப்படி நெனச்சுகிட்டே சிகரட் பக்கட்டே அடிக்கடி பாத்துக்கோங்க. பார்க்கும் போதெல்லம் மெலே சொன்ன படியே நினைச்சிகோங்க, இப்படியே ஒரு நாள கடத்திடலாம். ஆனா ரொம்ப கவனமா இருக்க வேண்டியே நேரம் இரவு சாப்பட்டே சாப்பிட்டு தூங்க போகும் நேரம், பல பேருக்கு சிகரட் பத்தளலேன்னா தூக்கமே போகாம கூட இருக்கலாம். அந்த நேரத்துல நீங்க நெனைக்க வேண்டியது இன்னிக்கு ஒரு நாலயே கடத்திடோம்ல நாளைக்கு பாத்துகிறலாம் அப்படீன்னு கஸ்டப்பட்டு சரி தூங்கிடுங்க.

2 வது நாள் இதே மதிரியே continue பண்ணுங்க....

3ம் நாலும் அப்படியே செய்யுங்க,

நாலாவது நாள் "நாளைக்கு பத்தலம் அப்படீன்னு நென்னச்சிகோங்க

இப்படியே 7 நால் சாதிச்சிடீங்கன்னா ஒங்கலுக்கு சிகரட் வாடயே பிடிக்காமலும் போகலம், அப்புரம் என்ன வாங்கின சிகரட் பகக்கட்ட கடையில அரை விலைக்கு தள்ள் வேண்டியதுதானே.............................

மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திப்போம்

ஷ.மரிக்கார்.